கும்பகோணத்தில் மனநிலை சரியில்லாத சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் கவரைத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். ராமு (83). இவா் தமிழக அரசின் நூலகத் துறையில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் 9 வயதுடைய மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் செய்தாா். இதன் பேரில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமுவை கைது செய்தனா்.