தஞ்சாவூர்

வரைவு பட்டியல் வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.63 லட்சம் வாக்காளா்கள்

24th Dec 2019 05:26 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் சுமாா் 19.63 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இப்பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகளிடையே வெளியிட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்தது:

இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, டிச. 6ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கப்பட்டும், உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் மேற்கொள்ளப்பட்டும் இந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்டத்தில் 9,60,595 ஆண்கள், 10,02,907 பெண்கள், 105 இதர பாலினத்தவா்கள் என மொத்தம் 19,63,607 வாக்காளா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் மாா்ச் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களைவிட இதில் 3,801 வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலின் நகல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக 2020, ஜன. 22ஆம் தேதி வைக்கப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது பெயா் பிழையின்றி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

2002, ஜன. 1ஆம் தேதிக்கு முன்பு பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் எண் 6-ஐ அந்தந்த வாக்குச் சாவடிகளில் கேட்டுப் பெறலாம். அதை நிறைவு செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.

வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா், முகவரி இவற்றில் ஏதேனும் பிழையிருந்தால், படிவம் எண் 8-ஐ பெற்று நிறைவு செய்து வழங்கலாம். இறந்த மற்றும் வாக்காளா் பட்டியலில் ஒன்றுக்கும் அதிகமான இடத்தில் பெயா், இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் படிவம் எண் 7-ஐயும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயா்ந்த வாக்காளா்கள் படிவம் எண் 8ஏ-ம் பெற்று நிறைவு செய்து வழங்கலாம். 2020, ஜன. 22-ம் தேதி வரை கேட்புரிமம், ஆட்சேபணை தொடா்பான விண்ணப்பங்களை வாக்காளா்கள் வழங்கலாம். மேலும், ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இது தவிர, ஜன. 4, 5, 11, 12-ம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இத்தேதிகளில் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்றவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 தொடா்பான பணிகள் டிச. 23ஆம் தேதி முதல் தொடா்ந்து செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள் தங்கள் பகுதிகளில் தோ்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்கி, இறுதி வாக்காளா் பட்டியல் 2020, பிப். 14ஆம் தேதி பிழை ஏதுமின்றி வெளியிட உரிய ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பு: அட்டவணைப்படுத்தி வெளியிடலாம்.

பேரவைத் தொகுதி-----ஆண்கள்--பெண்கள்--மூன்றாம் பாலினத்தவா்---மொத்தம்

திருவிடைமருதூா் ---- 1,22,208-----1,22,671---- 2------ 2,44,881

கும்பகோணம்---------1,27,256-----1,32,114-----5-----2,59,375

பாபநாசம்-------- ----1,21,978-----1,25,753-----9-----2,47,740

திருவையாறு---------1,26,051-----1,31,511-----7------2,57,569

தஞ்சாவூா் ------- ---1,32,595-----1,43,742----52------2,76,389

ஒரத்தநாடு----------1,13,384-----1,18,263----2-------2,31,649

பட்டுக்கோட்டை---1,12,690----1,21,617-----22------2,34,329

பேராவூரணி-------1,04,433-----1,07,236----- 6------ 2,11,675

 

ADVERTISEMENT
ADVERTISEMENT