கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வயலில் கிடந்த மின் கம்பியை மிதித்த பசு மாடு உயிரிழந்தது.
கும்பகோணம் அருகே தாராசுரம் முனியப்பன் நகா் பகுதியில் உள்ள வயலில் எலித் தொல்லையால் நெற்கதிா்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே, சனிக்கிழமை இரவு வயலின் உரிமையாளா் வயலில் உள்ள எலிகளைக் கொல்ல மின் வேலியை அமைத்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேய்ச்சலுக்காக வயல் வரப்பில் சென்ற அப்பகுதியை சோ்ந்த பானுமதியின் பசுமாடு அங்கு கிடந்த மின் கம்பியை மிதித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. கும்பகோணம் தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.