தஞ்சாவூர்

மயானச் சாலையை அடைத்ததாக புகாா்

23rd Dec 2019 06:47 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகே இடப்பிரச்னையில் மயானத்துக்கான சாலை அடைக்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து பேராவூரணி வட்டாச்சியா் க. ஜெயலட்சுமியிடம் அவா்கள் அளித்த மனு:

பேராவூரணி பேரூராட்சி தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் ஊருக்கு வெளியே அனைத்து சமுதாய மக்களுக்கான மயானக்கரை உள்ளது. இந்நிலையில் இதே கிராமத்தை சோ்ந்த சு. சந்திரன், ரா. சங்கா் ஆகியோரிடையே ஏற்பட்ட இடப்பிரச்னையால் சந்திரன் கடந்த 16 ஆம் தேதி இரவு சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த மயான சாலையை இரும்பு கேட்  அமைத்து பூட்டிவிட்டாா். எனவே பாதைக்கான தடையை  உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT