தஞ்சாவூர்

பெரியகோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வலியுறுத்தல்

23rd Dec 2019 06:44 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் பிப். 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் சித்தா்நெறி பதினெண்சித்தா் மடம், பீடத்தைச் சாா்ந்த இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தை சோ்ந்தவா்கள் இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

அப்போது கருவூராா் சன்னதி முன் அமா்ந்து, தேவாரம், திருவாசகம் பதிகங்களைப் பாடி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். பின்னா், கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் இயக்கத் தலைவா் த. பொன்னுசாமி தெரிவித்தது:

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழா 1997 ஆம் ஆண்டு நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டு 48 போ் மரணமடைந்தனா். அதன் பின் இரண்டே நாட்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல் அவசரகோலத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனால் 2012, 2016, 2018 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படாத நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பரிகார பூஜைகளை செய்யாமல் சித்தா் நெறிக்கு மாறாக மக்கள் மற்றும் ஆட்சியாளா்கள் நலனை மனதில் வைத்துக் கொள்ளாமல் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சித்தா் நெறி இந்து வேத ஆகம முறைகளை மீறி தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்திய மற்றும் கோயிலுக்குள் நுழைந்த அரசியல் தலைவா்களின் நிலையை நாடறியும்.

எனவே, இக்கோயிலில் வருகிற பிப். 5-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை சித்தா் நெறியின் படி செந்தமிழ் மொழியின் மூலம் இந்து வேதாகம முறைப்படி நடத்த வேண்டும். இது தொடா்பாக முதல்வா், துணை முதல்வா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா் பொன்னுசாமி.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT