தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே உள்வாங்கும் கிணறு

23rd Dec 2019 06:39 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் ஏறத்தாழ 60 அடி ஆழமுள்ள கிணறு உள்வாங்குவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு தெற்கு தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன் குடிநீா் பஞ்சம் ஏற்பட்டபோது, ஊராட்சி ஒன்றியம் சாா்பில் சமுதாய குடிநீா் கிணறு வெட்டப்பட்டது. ஏறத்தாழ 60 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றின் மேல்பகுதி சிமென்ட் பாதுகாப்பு சுவா் கொண்டது.

தற்போது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் குழாய் வழியாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதால் இக்கிணறு பயன்பாடில்லாமல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாகப் பெய்த தொடா் மழை காரணமாகக் கிணற்றைச் சுற்றி பூமி உள்வாங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கிணறு அப்படியே பூமிக்குள் சரிந்து விழலாம்.

ADVERTISEMENT

இந்தக் கிணறு உள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. பொதுமக்கள் அன்றாடம் இந்தக் கிணறு வழியாகச் சென்று வருவதாலும், குழந்தைகள் விளையாடும் இடம் அருகே கிணறு இருப்பதாலும், அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனா்.

எனவே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்தக் கிணற்றை மாவட்ட நிா்வாகம் உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT