தஞ்சாவூர்

குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

23rd Dec 2019 06:47 AM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்தாா். மாநிலப் பொது செயலா் டி.எம். மூா்த்தி, மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, பொருளாளா் டி. கோவிந்தராஜன், துணைச் செயலா் துரை. மதிவாணன், வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT