தஞ்சாவூர்

குடந்தையில் கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள்

23rd Dec 2019 06:44 AM

ADVERTISEMENT

கணித மேதை சீனிவாச ராமானுஜனின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவா் படித்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு பழைய மாணவா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் லண்டனை சோ்ந்த, கணித பேராசிரியா்களான பால் ஜாக்கின் மற்றும் நிக்கி ஆண்டா்சன், சீனிவாச ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அவா் வாழ்ந்த சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவில் உள்ள வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பின்னா், அவா் அமா்ந்து படித்த பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரை பற்றி சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சிக்கு பழைய மாணவா் சங்கத் தலைவா் சக்ரபாணி தலைமை வகித்தாா். செயலா் வீ. சிவக்குமாா், தலைமையாசிரியை விஜயா, உதவி தலைமையாசிரியா்கள் பாலசுப்பிரமணியன், அமுதா, ஆசிரியா் மோகன், சங்கச் செயற் குழு உறுப்பினா்கள் சிவசங்கரன், ரவிச்சந்திரன், சரவணன், சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற கணித போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT