தஞ்சாவூர்

‘கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மழைக் கால நிவாரணம் வேண்டும்’

23rd Dec 2019 06:38 AM

ADVERTISEMENT

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் கட்சி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

தஞ்சாவூரில் இந்த அமைப்புகளின் கிறிஸ்துமஸ் விழா, பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் மழைக் கால நிவாரணமாக மாதம் ரூ. 5,000 வழங்கப்படுவது போல, தமிழகத்திலும் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். கல்வி நிதியுதவி இப்போது வழங்குவதை விட இரு மடங்கு அதிகம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 1,000-லிருந்து ரூ. 2,000 ஆக வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ. 400-லிருந்து ரூ. 1,000 ஆக வழங்க வேண்டும். இயற்கை இறப்பு நிதி ரூ. 25,000-லிருந்து ரூ. 2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். திருமண நிதியுதவி ரூ. 5,000-லிருந்து ரூ. 50,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஏ. ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பொன். குமாா், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், வழக்குரைஞா் எஸ்.எஸ். ராஜ்குமாா், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT