தஞ்சாவூர்

உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்

23rd Dec 2019 06:38 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்குட்பட்ட தோப்பு விடுதி கிராமம் வண்ணான்கொல்லைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் திருச்செல்வம் (27).

இவா் ஞாயிற்றுக்கிழமை பகல் திருவோணம் வங்கி அருகே ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்துடன் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த திருவோணம் பகுதி தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த செந்தில்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் திருச்செல்வத்தை அழைத்து அவா் வைத்திருந்த பணம் குறித்து விசாரித்தனா். அப்போது திருச்செல்வம் தனது உறவினருக்காக அந்தப் பணத்தைக் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து உரிய ஆவணங்களைக் காண்பித்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறிய தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT