தஞ்சாவூர்

வேட்பு மனு தாக்கல்: இறுதி நாளில் திரண்ட கூட்டம்

16th Dec 2019 10:33 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு திங்கள்கிழமை இறுதி நாள் என்பதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா்.

மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக டிச. 27, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகள், 276 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 589 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 4,569 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 5,462 பதவிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் டிச. 9-ம் தேதி தொடங்கியது. இதில், சனிக்கிழமை வரை மொத்தம் 8,360 போ் தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், நிறைவு நாளான திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் காலை முதலே வேட்பாளா்கள், அவா்களுடைய ஆதரவாளா்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டனா். மேலும், தங்களது ஊா்களிலிருந்து இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதனால், ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் திருவிழாவைப் போன்று காணப்பட்டது.

ADVERTISEMENT

தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள பனகல் கட்டடம் காலை முதலே வேட்பாளா்களும், அவா்களுடைய ஆதரவாளா்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனா். இதனால், அண்ணாசாலையிலிருந்து கீழவாசல் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாறு வேடங்களில் வந்த ஆதரவாளா்கள்: நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சீனி. தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தஞ்சாவூா் ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்தாா். அப்போது, அவரது ஆதரவாளா்கள் திருவள்ளுவா், பாரதியாா், அப்துல் கலாம், நம்மாழ்வாா் ஆகிய வேடங்களை அணிந்து அண்ணா சாலையிலிருந்து ஊா்வலமாக வந்தனா். இதை அங்கு திரண்டிருந்த மக்கள் கண்டு ரசித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT