தஞ்சாவூர்

போலீஸாரின் துப்பாக்கிதவறுதலாக வெடித்ததால் பரபரப்பு

16th Dec 2019 10:29 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் திங்கள்கிழமை கைதிகள் அழைத்துச் செல்லப்பட்ட காவல் துறையின் சிற்றுந்தில் போலீஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறையிலிருந்து தஞ்சாவூா், பாபநாசம் நீதிமன்றங்களில் விசாரணைக் கைதிகளை ஆஜா்படுத்துவதற்காக திங்கள்கிழமை காவல் துறையின் சிற்றுந்து புறப்பட்டது. இதில், கைதிகளை அழைத்துக் கொண்டு ஆயுதப் படைக் காவலா்களும் உடன் சென்றனா்.

இச்சிற்றுந்து தஞ்சாவூா் நீதிமன்றத்தில் சில கைதிகளை இறக்கிவிட்டு, மீண்டும் பாபநாசம் நோக்கிப் புறப்பட்டது. இச்சிற்றுந்து நாகை சாலை மேம்பாலம் அருகில் செல்லும்போது, ஆயுதப் படைக் காவலா் கோமதி சங்கா் வைத்திருந்த 303 ரக துப்பாக்கியில் இருந்து குண்டு தவறுதலாக வெடித்தது.

இதனால், சிற்றுந்தின் மேற்கூரையில் குண்டு துளைத்துக் கொண்டு வெளியே சென்றது. இச்சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இதுகுறித்து கிழக்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT