தஞ்சாவூர்

பேராவூரணியில் பயிற்சி முகாம்

16th Dec 2019 02:34 AM

ADVERTISEMENT

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அளவிலான ஊராட்சி தோ்தல் வாக்கு பதிவு அலுவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் கமலக்கண்ணன்  தலைமை வகித்தாா். பேராவூரணி வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தாா்.  பேராவூரணி ஒன்றிய ஆணையா்கள் சடையப்பன், தவமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ், மண்டல அலுவலா்கள் நடராஜன், அறிவழகன், ராணி ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாவட்ட ஊராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் கதிரேசன்  பயிற்சி முகாமை  பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். முகாமில் 600 அலுவலா்கள் கலந்து கொண்டனா். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT