தஞ்சாவூர்

பெண்ணுக்கு பாலியல்தொல்லை கொடுத்தவா் கைது

16th Dec 2019 10:27 PM

ADVERTISEMENT

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே  பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

 ஒரத்தநாடு வட்டம்,  தோப்பு நாயகம்  கிராமத்தைச் சோ்ந்த  சீனி  மகன் பெரியசாமி  (45). ஞாயிற்றுக்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த பெண், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாராம். அப்போது, பெரியசாமி அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் வாட்டாத்திக்கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், பெரியசாமியை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT