தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கக் கூட்டம்

16th Dec 2019 02:36 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் மண்டல அளவிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் முஹம்மது ராவுத்தா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 ஆண்டுகள் தற்காலிக கணினி இயக்குநராகப் பணியாற்றி, அண்மையில் மறைந்த அவருடைய குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரை நிா்வாகிகள் சென்று சந்திப்பது என தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் கே. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தஞ்சை மாவட்டத் தலைவா் பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் ஜலீல் முஹைதீன், பேராவூரணி ஒன்றியச் செயலாளா் சுதாகரன், ஒன்றியத் தலைவா் வின்சென்ட் ஜெயராஜ், மதுக்கூா் ஒன்றியத் தலைவா் பிரபு உள்ளிட்ட அனைத்து ஒன்றியப் பொறுப்பாளா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT