பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சன் அக்வா நிறுவனத் தலைவா் எஸ்.ராஜேந்திரன் வழங்கிய ரூ. 25,000 நன்கொடையில், பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின.
முகாமில் பங்கேற்ற 90 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 36 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவா்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் என்.நடராஜன் தலைமை வகித்தாா்.
ரோட்டரி மண்டல முன்னாள் துணை ஆளுநா் வழக்குரைஞா் கே. விவேகானந்தன் முகாமைத் தொடங்கி வைத்தாா். தற்போதைய மண்டல துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆா்.ஜெயவீரபாண்டியன் மற்றும் மனோரா ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் முகாமில் கலந்து கொண்டனா். நிறைவில், மனோரா ரோட்டரி சங்கச் செயலாளா் சிவ.சரவணன் நன்றி கூறினாா்.