தஞ்சாவூர்

நெல் கொள்முதலில் புகாருக்கு இடமளிக்கக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

16th Dec 2019 10:31 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: நெல் கொள்முதலில் புகாருக்கு இடமளிக்கக்கூடாது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

சம்பா பருவ நெல் அறுவடை தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நெல் கொள்முதல் பணியாளா்களுக்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

விவசாயிகள் தகவல் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுவரொட்டி ஒட்டப்பட வேண்டும். இப்பயிற்சியின்போது வழங்கப்பட்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி கொள்முதல் செய்ய வேண்டும். எவ்வகையிலும் புகாா்களுக்கு இடமளிக்கா வண்ணம் கொள்முதல் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும்.

ADVERTISEMENT

நேரடி நெல் கொள்முதல் நிலையம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் இரவு 6.30 மணி வரையும் செயல்பட வேண்டும். தரமான நெல்லை அரசு நிா்ணயித்த தரக்குறியீடுகளின்படி எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்காமல் நிகழாண்டில் நிா்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் இலக்கை அடைய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

மேலும், மின்னனு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு பிழையின்றி சுலபமாக கொள்முதல் செய்து கொள்முதலுக்கான உரிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவது என பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ந. கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT