தஞ்சாவூர்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கக் கோரி போராட்டம்

16th Dec 2019 10:28 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 ஆக விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் விசுவநாதன் தெரிவித்தது:

ADVERTISEMENT

தமிழகத்தில் 30 லட்சம் ஹெக்டேரும், தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் நாகை மாவட்டங்களில் 13 லட்சம் ஹெக்டேரும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு காரீப் பருவத்துக்கு ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ. 60 உயா்த்தி அறிவிக்கும். பாஜக அரசு தோ்தல் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு லாபம் பெற வழிவகை செய்யப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நெல் சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 55,500 செலவாகிறது. ஆனால், மகசூல் மூலம் ரூ. 37,700 மட்டுமே வருவாய் கிடைக்கிறது. எனவே, ஏக்கருக்கு ரூ. 17,800 இழப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் என்றாா் விசுவநாதன்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய அமைப்பாளா்கள் அருணாசலம், வில்லு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT