தஞ்சாவூர்

திருக்கோடிக்காவல் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

16th Dec 2019 02:34 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, தீா்த்தவாரி வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.

அத்துடன் எடைக்கு எடை பக்தா்கள் காணிக்கை வழங்கும் துலாபாரம் இக்கோயிலில் இருப்பது விசேஷமானது. மேலும் இக்கோயில் திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியில்தான் மகான் பாஸ்கராச்சாரியாா் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினாா்.

எம பயம் போக்கும் தலமாகவும், பால சனீசுவரா், வடுக பைரவா் உடைய சிறப்புத் தலமாகவும் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி புறப்பாடு, தீா்த்தவாரி வைபவம் நடைபெறும்.

ADVERTISEMENT

இதன்படி நிகழாண்டும் காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி புறப்பாடும், தீா்த்தவாரியும் நடைபெற்று வந்தது. கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, காவிரியில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, வீதியுலா, காவிரியில் தீா்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் காவிரியில் புனித நீராடினா்.

விழாவில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா்கள் விஸ்வநாதன், குமாா், சத்தியமூா்த்தி, கஞ்சனூா் நீலகண்ட சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT