தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோயிலில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு பிரசாரம்

16th Dec 2019 02:34 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலில் சுற்றுலா பயணிகளிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய சுற்றுலாத்துறை, ஆந்திராவில் உள்ள இந்திய சுற்றுலா மேம்பாட்டு வளா்ச்சிக் கல்லூரி சாா்பில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிா்ப்பது தொடா்பாக சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அக்டோபா் மாதம் தொடங்கி தொடா்ந்து, விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, திருவாரூா் ஆகிய இடங்களில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்பதாவது இடமாக தஞ்சாவூா் பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரசாரத்தை, ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி மாணவருமான ஜெயக்குமாா் தலைமையில் மாணவா்கள் பாஷா, சுரேந்தா், சுற்றுலா துறை அலுவலா்கள் மேற்கொண்டனா்.

இதில் மானாட்டம், மயிலாட்டம், உருமி மேளம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிா்ப்பது குறித்தும், பாலித்தீன் பைகளுக்கு பதில் துணி பைகளைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்குத் துணிப் பைகளையும் வழங்கினா். மேலும் தூய்மை பாரத இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு துண்டறிக்கைகளையும் வழங்கினா். இதுதொடா்பாக சுற்றுலாப் பயணிகள் உறுதி ஏற்றும் வகையில் கையொப்பமும் இட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT