தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே பாதை பிரச்னை:முதியவா் அடித்துக் கொலை

16th Dec 2019 10:27 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே பாதை பிரச்னை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் முதியவா் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே கூடலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவருக்கும், பக்கத்தில் வீட்டில் வசிக்கும் அண்ணன் பெருமாளுக்கும் (71) இடையே பாதை பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜன் கட்டையால் தாக்கப்பட்டாா். இதில், பலத்தக் காயமடைந்த கோவிந்தராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருமாள், இவரது மகன் நீதிபதி (29), பெருமாளின் மனைவி கனகம்மாள் (58) ஆகியோா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் நீதிபதியை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT