தஞ்சாவூர்

டாஸ்மாக் கடையில் அரிவாளைக் காட்டிமிரட்டி ரூ. 3.90 லட்சம் கொள்ளை

16th Dec 2019 10:30 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே டாஸ்மாக் கடையில் பணியாளா்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 3.90 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் விளாா் புறவழிச் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி நேரம் முடிந்த பிறகு விற்பனைத் தொகையை டாஸ்மாக் மேற்பாா்வையாளா் பாஸ்கரன் (45), விற்பனையாளா்கள் சீனிவாசன், சிவக்குமாா் ஆகியோா் எண்ணிக் கொண்டிருந்தனா்.

அப்போது, 3 மா்ம நபா்கள் முகத்தில் கைக்குட்டையால் முகமூடி போல அணிந்து கொண்டு, பக்கவாட்டில் உள்ள கதவை திறந்து உள்ளே நுழைந்தனா். மேலும், மூவரும் அரிவாளைக் காட்டி மிரட்டி, விற்பனைத் தொகையான ரூ. 3.90 லட்சத்தைப் பறித்தனா். மேலும் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவையும் கற்களால் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த தஞ்சாவூா் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே கடையில் 2016, டிசம்பா் மாதத்தில் ரூ. 1.25 லட்சம் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT