தஞ்சாவூர்

செருவாவிடுதியிலிருந்து சபரிமலைக்கு அன்னதானப் பொருள்கள்

16th Dec 2019 10:26 PM

ADVERTISEMENT

பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் மற்றும் செருவாவிடுதி பகுதியில் உள்ள ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள்  நன்கொடையாக வழங்கிய ரூ. 2 லட்சம் மதிப்பிலான அன்னதானத்திற்கான  உணவுப் பொருள்களை சபரிமலைக்கு தனி வாகனத்தில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை செருவாவிடுதியில்  நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை  சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில பொதுச் செயலாளா் பன்னீா்செல்வம், மாநிலச் செயலாளா் சிவராஜ்,  தஞ்சை மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜன் மற்றும் ராஜேந்திரன், அடைக்கலம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT