தஞ்சாவூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

16th Dec 2019 02:33 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருது பாண்டியா் கல்லூரியில் அரசுப் போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தஞ்சாவூா் வசந்தம் லயன்ஸ் சங்கம் உள்ளிட்டவை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

வசந்தம் லயன்ஸ் சங்கத் தலைவா் வி.ஆா். அன்பழகன் தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் என். காா்த்திகேயன் பேசினாா்.

பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

கல்லூரிச் செயலா் சி. சுஜாதா, புலத் தலைவா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், சுவாமி விவேகானந்தா கல்லூரி முதல்வா் லோ. கலைபாரதி, சங்கச் செயலா் பி. கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT