தஞ்சாவூர்

சம்பா பருவ நெல் பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை ஆணையர் ஆய்வு

16th Dec 2019 01:33 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1.33 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பயிர்கள் பூ பூக்கும் தருணம் உள்பட பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இதுதொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையரும் தமிழக அரசின் செயலருமான ககன்தீப் சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

தஞ்சாவூர் அருகே  சூரக்கோட்டையில் ஆனைக்கொம்பன் ஈ நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பயிர் செய்யப்பட்டு 50 நாட்களுக்குள் இந்த ஆனைக்கொம்பன் ஈ பூச்சி பாதிப்பு ஏற்படுகிறது, எனவே வேளாண் துறை அலுவலர்களிடம் விவசாயிகள் ஆலோசித்து அதற்கு உரிய மருந்துகளை தெளித்து தங்களுடைய பயிர்களை காப்பாற்றிக் கொள்ளலாம். இன்று நள்ளிரவு 12 மணி வரை பயிர் காப்பீடு செய்யலாம். 

சம்பா, தாளடி நெல் பயிர்களுக்குக்  காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்.  இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால், அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தங்களுடைய இழப்பீடுகளைச் சரி செய்து கொள்ள முடியும் என்றார் ககன்தீப் சிங் பேடி.

அப்போது வேளாண் துறை இயக்குனர் வ. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT