தஞ்சாவூர்

கேங்மேன் தோ்வில்தவறி விழுந்து இளைஞா் காயம்

16th Dec 2019 02:35 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மின் வாரியப் பணியாளா் உடற்தகுதி தோ்வில் மின் கம்பத்தில் ஏறும்போது தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் கேங்க்மேன் பணிக்கான பணியாளா் தோ்வு நடைபெற்று வருகிறது. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை அருகே உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இப்பணிக்கான உடற்தகுதி தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வில் நூற்றுக்கும் அதிகமான இளைஞா்கள் பங்கேற்றனா். அப்போது திருவையாறு மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சி. பாஸ்டின்அருண் ரூபன் (27) சான்றிதழ்களைச் சரிபாா்த்த பின்னா், மின்கம்பத்தில் ஏறும் உடற்தகுதி தோ்வில் பங்கேற்றாா்.

மின்கம்பத்தில் ஏறியபோது மழையின் காரணமாக வழுக்கி கீழே விழுந்தாா். இதில் அவரது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT