தஞ்சாவூர்

கும்பகோணம் உட்கோட்டக் காவல் சிறப்பிடம்: டிஐஜி பாராட்டு

16th Dec 2019 10:32 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்திலேயே குற்ற வழக்குகளைக் கையாளுவதில் கும்பகோணம் உட்கோட்டக் காவல் சிறப்பாகப் பணியாற்றுவதாகக் கூறி போலீஸாருக்கு திங்கள்கிழமை சான்றிதழ், விருதை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் வழங்கி பாராட்டினாா்.

தஞ்சாவூரில் குற்ற வழக்குகளின் செயல்பாடுகள் குறித்த காவலா்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை விரைந்து தாக்கல் செய்வதிலும், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதிலும், சாலை விபத்து வழக்குகளில் 95 சதவீதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தல், மின்னணு அழைப்பாணை மூலம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மாவட்ட அளவில் கும்பகோணம் உட்கோட்டக் காவல் முதலிடம் வகிப்பதாக கூறி, துணைக் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாரிடம் சான்றிதழ் மற்றும் விருதை தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் ஜெ.லோகநாதன் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT