தஞ்சாவூர்

கும்பகோணத்தில் டிச. 18, 19-இல் குடிநீா் விநியோகம் ரத்து

16th Dec 2019 10:27 PM

ADVERTISEMENT

கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் டிச. 18, 19-ம் தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என ஆணையா் எஸ். லெட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கும்பகோணம் நகராட்சி பேட்டை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிய வால்வுகள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது. எனவே, வாா்டு எண் 12 முதல் 17 வரையும், 32 முதல் 34 வரையும் டிச. 18, 19-ம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT