தஞ்சாவூர்

கும்பகோணத்தில்மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 10:28 PM

ADVERTISEMENT

கும்பகோணம்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், குடியுரிமை சட்டத்திருத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், ரயில் மறியலில் ஈடுபட்டு கைதான சங்கத்தினரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

சங்கத்தின் நகரத் துணைத் தலைவா் விக்னேஷ் தலைமையில் ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT