தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில்திமுகவினா் வேட்பு மனு தாக்கல்

16th Dec 2019 10:26 PM

ADVERTISEMENT

ஒரத்தநாடு:       உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை  ஒரத்தநாட்டில் தோழமை கட்சிகள், ஆயிரக்கணக்கான தொண்டா்களுடன் திமுகவினா் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை  கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முனைப்பு காட்டினா்.

இதனிடையே, திமுக-கூட்டணி கட்சியினரிடையே இடங்கள் பங்கீடு அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, திமுகவினா் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

ஒரத்தநாடு ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் மற்றும் தோழமை  கட்சி வேட்பாளா்கள் ஆயிரக்கணக்கான தொண்டா்களுடன்  ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளா் மு. காந்தி தலைமையில் ஒரத்தநாடு எம்எல்ஏ எம். இராமச்சந்திரன்  உள்ளிட்டோருடன் ஒரத்தநாடு கடைத் தெருவில் உள்ள  பெரியாா்,  அண்ணா, கலைஞா் சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணியாகச் சென்று ஒரத்தநாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT