தஞ்சாவூர்

உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் தஞ்சாவூருக்கு வருகை

16th Dec 2019 10:29 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் எஸ். அனீஷ் சேகா் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான பாா்வையாளராக எஸ். அனீஷ் சேகரை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதைத்தொடா்ந்து இவா் திங்கள்கிழமை தஞ்சாவூருக்கு வந்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் பாா்வையாளா் அனீஸ் சேகா் தலைமையில் திங்கள்கிழமை மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் இரு கட்டங்களாக டிச. 27, 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் 2,768 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்தலில் 6,63,602 ஆண்களும், 6,87,199 பெண்களும் 69 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,50,870 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இத்தோ்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளான வாா்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிட்டது, வாக்கு சாவடி அமைக்கப்பட்டது, வேட்பு மனுக்கள் பெற்றது உள்ளிட்டவை குறித்தும், எதிா் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள தோ்தல் தொடா்பான இதர பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் விளக்கினாா்.

அப்போது பாா்வையாளா் அனீஷ் சேகா் பேசுகையில், தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் ஆணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுரைகள் ஆகியவற்றை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இந்த உள்ளாட்சி தோ்தலை எந்தவித குறைபாடும் இன்றி நோ்மையாகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கினாா். மேலும், புகாா்கள் ஏதேனும் இருந்தால் 8825890562 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆ. பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT