தஞ்சாவூர்

வல்லம்புதூரில் விழிப்புணா்வு பேரணி

14th Dec 2019 10:28 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வல்லம்புதூா் கிராமத்தில் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் மாணவிகள் தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை அண்மையில் நடத்தினா்.

இதில் வல்லம் புதூா் அரசு பள்ளியைச் சோ்ந்த சுமாா் 50 மாணவா்கள் கலந்து கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

மேலும், அதே கிராமத்தில் பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிா்தம் குறித்த செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா். இதில், பஞ்சகாவ்யா என்பது பசுவின் மூலம் வரும் பால், தயிா், நெய், சாணம், கோமியம் ஆகிய ஐந்து பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது பயிா்களின் வளா்ச்சியை ஊக்குவிப்பதுடன், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது என மாணவிகள் விளக்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT