தஞ்சாவூர்

தமுஎகச சாா்பில்பட்டுக்கோட்டையில் டிச. 22-இல் பேச்சுப் போட்டி

14th Dec 2019 05:20 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்டக் குழு சாா்பில் டிசம்பா் 22ஆம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமுஎகச மாவட்டச் செயலா் இரா. விஜயகுமாா் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பாக மாவட்ட அளவில் முப்பெரும் கவிஞா்கள் (பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) தின விழா டிச. 22-ம் தேதி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், நாடியம்மன் கோயில் தெரு எம்.என்.வி. திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும், முப்பெரும் கவிஞா்கள் குறித்த கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் ஒரு கல்லூரியிலிருந்து 3 போ் மட்டுமே கலந்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை, பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வோா் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். காடு விளைஞ்சென்ன, தானாய் எல்லாம் மாறும் என்பது, இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் ஆகிய 3 தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 94881 27800, 91592 53830 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT