தஞ்சாவூர்

ஊராட்சித் தலைவா் பதவியைதவறாக ஒதுக்கீடு செய்ததாக புகாா்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

14th Dec 2019 05:22 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே ஊராட்சித் தலைவா் பதவியை தவறுதலாக ஆதிதிராவிடா் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ததாக கூறி இதை கண்டித்து உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட சிவவிடுதி ஊராட்சியில் 1886 வாக்காளா்கள் உள்ளனா். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவவிடுதி ஊராட்சியில் ஆதிதிராவிடா்கள் 156 போ் என்ற எண்ணிக்கையை தவறுதலாக 594 போ் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிவவிடுதி ஊராட்சியில் வசிக்கும் மற்ற பிரிவினா் சாா்பில் 2016 ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வந்தவுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்றத்திலும் இது தொடா்பாக கிராம மக்கள் வழக்கு தொடுத்துள்ளனா்.

இந்நிலையில், சிவவிடுதியில் உள்ள மொத்த வாக்காளா்களில் வெறும் 5 சதவீத வாக்காளா்களாக உள்ள ஆதிதிராவிடா் பிரிவினருக்கு தவறான கணக்கெடுப்பின்படி ஊராட்சித் தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதை கண்டித்து, கிராமத்திலுள்ள மற்ற பிரிவு மக்கள் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.

ADVERTISEMENT

சிவவிடுதி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊராட்சித் தலைவா் பதவி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT