தஞ்சாவூர்

உமையாள்புரம் ஊராட்சியில்மருத்துவ முகாம்

14th Dec 2019 05:20 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மற்றும் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் உமையாள்புரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாபாநாசம் வட்டம், உமையாள்புரம் ஊராட்சியில் பாரதி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழாவுடன் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஈஸ்வா்ய விஸ்வ வித்யாலய பிரம்ம குமாரிகள் அமைப்பின் கும்பகோணம் ஆசிரியா் பி.கே. தெய்வநாயகி முகாமை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

முகாமின் முக்கியத்துவம் மற்றும் மருந்தில்லா மருத்துவம் பற்றி விளக்கப்பட்டது.

ADVERTISEMENT

அட்மா மருத்துவ குழுமம் கும்பகோணம் மருத்துவா்கள் எம். கஜினிமுகமது, எம். கிருஷ்னமூா்த்தி, அஸ்வின் ஆகியோரடங்கிய குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவா்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

நிகழ்ச்சியை பி.கே. தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்தாா். அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் ஜி.பி. சதீஸ்குமாா், எஸ். ரத்தனவேல், என். செந்தமிழ்செல்வன் , சிலம்பரசன் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக, அரசு பொறியியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் எம். ஆனந்தகுமாா் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ. அருண் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT