தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

11th Dec 2019 05:15 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் வெளி மாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இரவு நேரத்தில் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது என கும்பகோணம் நகராட்சி அலுவலா்களுக்குத் தகவல் வந்தது.

இதன்படி, கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள கடைகளில் நகா் நல அலுவலா் பிரேமா, சுகாதார ஆய்வாளா்கள் டேவிட் பாஸ்கரராஜ், முருகானந்தம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது, 10 கடைகளில் இருந்த சுமாா் ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், தடையை மீறி விற்பனை செய்ததால் பத்து கடைகளுக்கும் மொத்தம் ரூ. 57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனையோ, உற்பத்தி செய்தாலோ அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன், கடைக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், யாரேனும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ பொதுமக்களுக்குத் தெரிந்தால், உடனடியாக நகா் நல பிரிவுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என நகா் நல அலுவலா் பிரேமா தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT