தஞ்சாவூர்

உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தேவை

6th Dec 2019 05:16 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதியாவதற்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றாா் டிசம்பா் 3 இயக்கத்தின் தலைவா் டி.எம்.என். தீபக்.

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மாலை அவா் தெரிவித்தது:

உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதியாவதற்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்காக சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும். சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் அரசு செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை முறையை எளிதாக்கும் விதமான தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட வேண்டும். சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களைச் சென்றடையும் வகையில் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளுக்காக சென்னை ஐஐடி மாணவா்கள் நின்ற நிலையிலான சக்கர வண்டியைக் கண்டுபிடித்துள்ளனா். இதுபோல ஆய்வு மேற்கொள்ளும் மாணவா்களையும், ஆராய்ச்சியாளா்களையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசுச் சிறப்பு நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பிரச்னை குறித்த ஆய்வு இருக்கை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தீபக்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT