காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எந்த காரணத்தை கொண்டும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களை காவல் துறையினர் ஏற்காமல் திருப்பி அனுப்ப மாட்டார்கள். மேலும், குறைந்தபட்ச மனு ரசீது கட்டாயம் உங்கள் புகார்களுக்கு கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். போலீஸாரின் நடவடிக்கையில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லாதபட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.