தஞ்சாவூர்

பதாகைகள் அகற்றம்: இருவர் மீது வழக்கு

28th Aug 2019 10:37 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை இரவு டிராபிக் ராமசாமி போராட்டத்தைத் தொடர்ந்து விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா பகுதிக்கு திங்கள்கிழமை இரவு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விளம்பரப் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து, டிராபிக் ராமசாமி போராட்டத்தைக் கைவிட்டார்.
இதையடுத்து, ராமநாதன் ரவுண்டானா, ரயிலடி உள்ளிட்ட இடங்களில் இருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன. இதுதொடர்பாக இருவர் மீது தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT