தஞ்சாவூர்

ஆகஸ்ட் 30-இல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

28th Aug 2019 10:36 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம்.
இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை ஆக. 30ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னர் மனுக்களை அளிக்க வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT