திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவர்களுக்காக உள்ளத்தனையது உயர்வு என்ற தலைப்பில் தன்னூக்க மேம்பாட்டுப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கத்துக்குக் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி தலைமை வகித்தார். தஞ்சாவூர் நியூ டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் முகம்மது இக்பால், செயலர் ஜே. டேவிட் லூயிஸ், மு. கருப்பையா முன்னிலை வகித்தனர். தன்னூக்கப் பயிற்சியாளர் ஈரோடு கதிர் வாழ்க்கை மேம்பாடு தொடர்பாக தன்னம்பிக்கைக்கான வழிமுறைகள் குறித்து பேசினார். இப்பயிலரங்கில் ரோட்டரி நிர்வாகிகள் சைவ. குமணன், இரா. மோகன், குப்பு. வீரமணி, குணாரஞ்சன், பேராசிரியர் மணிக்குமரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.