தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே நாளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

27th Aug 2019 09:42 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சேதுபாவாசத்திரம் வட்டார வளமையம் சார்பாக, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 0-18  வயது வரையுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு  வரும் வரும் 28 ஆம் தேதி அழகியநாயகிபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. 
முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறவும், அன்னப்பிளவு, உதடு பிளவுகளுக்கான இலவச அறுவை சிகிச்சைக்கான பரிந்துரை, உதவி உபகரணங்கள் பெற பரிந்துரை செய்யப்பட உள்ளது. 
பெற்றோர் தங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றுடன்,  4 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு வரவேண்டும் .மேலும்  தலைமையாசிரியரிடம் ஒப்புதல் பெற்ற சான்று கொண்டு வரவேண்டும்.  
பட்டுக்கோட்டை, பேராவூரணி முகாம்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் இம்முகாமில் கலந்து பயன்பெறுமாறு சேதுபாவாசத்திரம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT