தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

23rd Aug 2019 10:07 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை கடைத்தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (27). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு 15 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் வியாழக்கிழமை மாலை வீட்டின் மாடியில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த எர்த் கம்பியில் கை பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதனால், மயக்கமடைந்த மணிகண்டன் திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து மருவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT