தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

23rd Aug 2019 10:10 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன்(35). இவர் பாபநாசம் கடைவீதியில் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் நல்லையனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நல்லைய்யன் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 200 பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். சம்பவம் குறித்து  நல்லைய்யன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,  நல்லைய்யனிடம் கத்தியை  காட்டி மிரட்டி  பணம் பறித்தது பாபநாசம் பகுதியை சேர்ந்த யோவான்(27), என்பது தெரிய வந்தது. இதையடுத்து,  யோவானை பாபநாசம் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT