தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

23rd Aug 2019 10:05 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் (பொ) கா. பரமேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில், 6 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 67 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கியது. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பேரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் நடைபெறும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கு 10 பேரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும் திறன் மேம்பாட்டு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு 16 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 
தவிர, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 26 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள மாதிரி தேர்வுக்கான முன் பதிவும் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT