தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

23rd Aug 2019 10:05 AM

ADVERTISEMENT

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் பன்னாட்டுப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை போன்று மாறுவேடம் அணிந்து வந்தனர். மேலும், கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் கார்த்திகேயன் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். வெண்ணெய் சாப்பிடும் காட்சியை 3-ம் வகுப்பு மாணவர்கள் நடித்து காட்டினர். மேலும் கிருஷ்ணர் பாடலுக்கு நடனமாடினர்.
கிருஷ்ணர் பிறப்பை, வாழ்க்கை வரலாற்றை மாணவிகள் எடுத்து கூறினர். புல்லாங்குழல், கோலாட்டம் போன்றவையும் இடம்பெற்றன. ஊஞ்சலில் கிருஷ்ணர் அமர்ந்து, அவரை சுற்றி ராதை ஆடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கார்த்தி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT