தஞ்சாவூர்

அனுமதியின்றி விளம்பர பேனர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு

23rd Aug 2019 10:05 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டாரத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்ததாக  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பாபநாசம் கடைவீதி,  திருக்கருகாவூர் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைத்திருந்தனர்.இந்த பேனர்கள் பாபநாசம் காவல் துறையினரின்  அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பேனர்களை அப்புறப்படுத்திய பாபநாசம் காவல் துறையினர் அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் உத்திராபதி, கிளைப் பொருளாளர் லிங்கேஸ்வரன் உள்ளிட்டோர் மீது  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT