பாபநாசம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அம்மாபேட்டை போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள், காவல்துறையினரைக் கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் கடத்தி கொண்டு வரப்பட்ட ஆற்று மணல் மாட்டு வண்டிகளில் இருந்ததை கண்டறிந்த போலீஸார், அந்த வண்டிகளை காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றனர்.
தொடர்ந்து மாட்டுவண்டியை கொண்டு வந்தவர்கள் யார் என்பது குறித்த விசாரித்து வந்த நிலையில்,
கோனூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் (48), செல்வம் (45) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து, வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.