தஞ்சாவூர்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு

11th Aug 2019 04:36 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செப். 1-ஆம் தேதி தொகுதி - 4 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  ஜூன் 10-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இதில், தற்போது அதிக அளவில் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பாட வாரியாக மிகச்சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு, மாணவர்களுக்கு  பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.   
கிராமப்புற மாணவர்கள் அனைவரும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று
பயன்பெறலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT