தஞ்சாவூர்

மாநில இறகுப்பந்துப் போட்டி: அதிரை அரசுப் பள்ளி மாணவர் சாதனை

11th Aug 2019 04:37 AM

ADVERTISEMENT


சென்னையில் நடைபெற்ற  மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில், அதிரை அரசுப் பள்ளி  மாணவர் அ. ஆத்திப் அகமது சாதனை நிகழ்த்தினார்.
சென்னை வேலம்மாள் வித்யாலயத்தில் மாநில அளவில் இடைநிலைப் பள்ளி சிறார்களுக்கான இறகுப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும்  மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் அ. ஆத்திப் அகமது, 10- வயதுக்குள்பட்டோர் பிரிவில் 4ஆம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினார். இதற்காக பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவரின் தந்தை  ஆ. அஜுமுதீன் , அதிராம்பட்டினம் காதர் முகûதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாறறி வருகிறார். மாணவரை பள்ளித் தலைமையாசிரியர் எஸ். மாலதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT